தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். இவர் நடிகை நளினியை காதலித்து கடந்த 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இந்த தம்பதி 13 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் திடீரென விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்நிலையில் நடிகர் ராமராஜன் தன்னுடைய மகள் வாழ்க்கையில் நடந்த சம்பவம் குறித்து  சோகமாக பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது, என் மகனுக்கு திருமணமான நிலையில் அவர் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். என்னுடைய பேரன் எப்போதும் என்னை மாடு தாத்தா என்றுதான் அழைப்பான். ஆனால் என் மகளுக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆன நிலையில் குழந்தை பிறக்கவில்லை. என்னுடைய மகளுக்கு ஒரு குழந்தை பிறந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று உருக்கமாக கூறியுள்ளார். மேலும் நளினி மற்றும் ராமராஜன் மகள் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய சோகமா என பலரும் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.