வீட்டு உபயோக சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் உண்மைத் தன்மையை அறிய, E-KYC பதிவு செய்யும் பணியை எண்ணெய் நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. மத்திய அரசு அறிவுறுத்தலின்பேரில், பயனாளர்களின் கைரேகை மற்றும் முகம் பதிவு செய்யும் முறையை மேற்கொள்வதாகக் கூறியுள்ள எண்ணெய் நிறுவனங்கள், கைரேகை பதிவு செய்யவில்லை என்றாலும், தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், மே 30-க்குள் E-KYC அப்டேட் செய்யாவிட்டால் சிலிண்டர் இணைப்பு ரத்து செய்யப்படும் என கேஸ் ஏஜென்சிகள் குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றன. இது குறித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாத நிலையில், கேஸ் ஏஜென்சிகள் தனித்து செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது