ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் உலா ஒரு கிராமத்தை சேர்ந்த 18 வயது தலித் சிறுமியும், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இளைஞரும் காதலித்து வந்துள்ளார்கள். இந்நிலையில்,  அந்த சிறுமி காதலனுடன் சம்பவத்தன்று தனிமையில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சிறுமியின் சகோதரர்கள், அவர்கள் இருவரையும் காட்டுப்பகுதிக்குள் இழுத்து சென்று கோடாரியால் வெட்டியுள்ளார்கள்.

அப்போது அங்கிருந்து தப்பிச்சென்ற இளைஞர் கிராமத்தினரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். ஆனால் சிறுமியை கோடாரியால் வெட்டிக்கொலை செய்துள்ளனர். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை வழக்கு பதிவு செய்து  சிறுமியின் சகோதரர்களை தேடி வருகின்றனர்.