இன்ஸ்டாகிராம் ரீல் எடுக்க முயற்சித்த 18 வயது இளைஞர் நீரில் மூழ்கி சாவு.

ஜார்கண்ட் மாநிலத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராம் ரீல் எடுக்க முயன்ற விபத்தில் பலியாகியுள்ளார். சாகிப்கஞ்ச் மாவட்டத்தில் கனி குட்டை ஏரி உள்ளது. சுமார் 100 அடி உயரத்தில் இருந்து ஏரியில் உள்ள தண்ணீரில் குதித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தனது நண்பர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது, அவர்களின் துணிச்சலான செயலை பதிவு செய்ய இளைஞர் குதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நண்பர்கள் இளைஞரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் மற்றும் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தண்ணீரில் விழுந்த இளைஞர் நீந்த முயன்றதும் மூழ்கத் தொடங்கியுள்ளார். மேலும் இளைஞர் ஆழமான நீரில் குதித்த பிறகு தன்னை கட்டுப்படுத்த முடியாமல் மூழ்கிவிட்டதாக டி.எஸ்.பி விஜய் குமார் தெரிவித்துள்ளார்.