தேர்தல் விவகாரத்தில் தான் கச்சத்தீவை பாஜக கையில் எடுத்துள்ளது என்ற கேள்விக்கு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 

இல்லைங்க…  தேர்தலுக்கும் – ஒரு நாட்டு பாதுகாப்பு சம்பந்தமான விஷயத்துக்கும்,  ஒரு இறையாண்மை சம்பந்தப்பட்ட  விஷயத்துக்கும் தேர்தல் தான் தேவைன்னு இல்லைங்க. இந்த விஷயத்துல எப்ப வேணா?  எங்க வேணா ? பேசலாம்…  நம்ம நாட்டின் இறையாண்மை,  நம் நாட்டினுடைய நாட்டின் உரிமை அதனால் தான் கச்சத்தீவு விவகாரம் கையில்  எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது RTI. அந்த ஆர்.டி.ஐ விவரமும் நான் தமிழில்  என்னுடைய ட்விட்டரில் போட்டு இருக்கேன். இதுல ப்ரைமரி பாயிண்ட் என்னங்க ? கச்சதீவு கட்சி எப்போது ? 1974இல் நடந்தது. இப்போது ஏன் அதை பத்தி பேசுறீங்கன்னு கேட்கலாம். ஆனால் அப்போது இருந்து சராசரி 50 வருஷத்துக்கு,  ஒரு உண்மைக்கு புறமான பிரச்சாரம் நடந்துகிட்டு இருக்கு. எங்களுக்கு தெரியாம கொடுத்துட்டாங்க… யாரோ கொடுத்துட்டாங்க… எப்படி கொடுத்தாங்க? என்னன்னு எங்களுக்கு தெரியாது.

இப்போ மீட்டுக் கொடுங்க.  இந்த மாதிரி ஒரு பொறுப்பில்லாத பேச்சு, நிறைய மக்கள் இடத்தில் பேசுறாங்க. அதுல மீனவர்களிடைய….  கச்சத்தீவுக்கும், எங்களுக்கு சம்பந்தமில்லை என்று யாரோ ஒரு பெரிய மூத்த தலைவர் கமெண்ட் பண்ணி இருக்காரு. சம்மந்தம் இல்லைன்னு சொன்னீங்கன்னா… 1974இல் ஏன் அவ்வளவு சர்ச்சை ஆச்சு ? என கேள்வி எழுப்பினர்.