தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்‌. இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய 171 வது படமான கூலி படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தங்கமகன் படத்தில் இடம் பெற்ற வா பக்கம் வா என்ற பாடலின் இசை அதில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது இளையராஜா இசையமைத்த பாடல் ஆகும். ஏற்கனவே இளையராஜா தான் இசையமைத்த பாடல்கள் முழுவதும் தனக்கு தான் சொந்தம் என்றும் தன்னுடைய அனுமதி இல்லாமல் தான் எழுதிய பாடல்களை பயன்படுத்தக் கூடாது எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் கூலி படத்தில் இளையராஜா இசையமைத்துள்ள பாடலின் இசை அமைந்துள்ளதால் தன் பாடல் இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு அவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.