தமிழக அரசியலில் தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் ஒரு சிறிய கை அசைவு, மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது, “தொகுதி பங்கீடு முடிந்துவிட்டதா?” என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ஸ்டாலின் அவர்கள் தனது கைகளால் ஒரு குறிப்பிட்ட சைகையை (Action) செய்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மீம் (Meme) மெட்டீரியலாக மாறிப் பரவிய நிலையில், “நான் அதைத் திட்டமிட்டுச் செய்யவில்லை, தற்செயலாக நடந்ததுதான்” என்று ஸ்டாலின் ஒரு மேடையில் விளக்கம் அளித்திருந்தார். இருப்பினும், அரசியல் களத்தில் இந்தச் சைகை ஒரு சாதாரண தற்செயல் நிகழ்வாகக் கடந்து செல்லப்படவில்லை.

தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்கள் இந்தச் சைகையை நுணுக்கமாக ‘டி-கோட்’ (Decode) செய்து, இது நடிகர் விஜய் அவர்கள் ‘துப்பாக்கி’ திரைப்படத்தில் செய்த அதே ஸ்டைலான அசைவு என்று சுட்டிக்காட்டி வருகின்றனர். துப்பாக்கி படத்தின் ஒரு காட்சியில் விஜய் செய்யும் அந்தத் தனித்துவமான கை அசைவையும், ஸ்டாலின் செய்த அசைவையும் ஒப்பிட்டுப் புகைப்படங்களை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

“>

 

“தளபதி விஜய்யின் பாணியை முதலமைச்சர் ஸ்டாலின் காப்பி அடிக்கிறார்” என்று தவெக தொண்டர்கள் விமர்சித்து வரும் நிலையில், இது ஒரு சுவாரஸ்யமான அரசியல் மோதலாகப் பார்க்கப்படுகிறது. சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் விஜய்யின் தாக்கம் அதிகரித்து வருவதையே இது காட்டுவதாக அவரது ரசிகர்கள் பெருமிதத்துடன் பதிவிட்டு வருகின்றனர்