தமிழக அரசியலில் ஒரு புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுகவின் திட்டங்களுக்கான பெயரிடல் முறை. ஆளுங்கட்சியான திமுக தனது திட்டங்களுக்கு ‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘கலைஞர் திட்டம்’, ‘உதயநிதி திட்டம்’ எனத் தனது கட்சித் தலைவர்களின் பெயர்களையே சூட்டி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் அல்லது தனிநபரின் பெயரைச் சூட்டி விளம்பரம் தேடிக்கொள்வது, அதிகாரத்தின் வெளிப்பாடாகவே தவெக ஆதரவாளர்களால் பார்க்கப்படுகிறது. இது ‘குடும்ப அரசியல்’ மற்றும் ‘சுய விளம்பர அரசியல்’ என்பதையே மீண்டும் உறுதிப்படுத்துவதாக அவர்கள் கடுமையாகச் சாடி வருகின்றனர்.
இதற்கு நேர்மாறாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது திட்டங்களுக்குத் தனது பெயரையோ அல்லது புகைப்படத்தையோ பயன்படுத்தாமல், தமிழகத்திற்காகப் பாடுபட்ட மாபெரும் தலைவர்களின் பெயர்களைச் சூட்டியிருப்பது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘வேலுநாச்சியார் திட்டம்’, ‘அஞ்சலை அம்மாள் திட்டம்’, ‘காமராஜர் திட்டம்’ மற்றும் ‘அன்னபூரணி திட்டம்’ எனப் பெயரிட்டதன் மூலம், தான் ஒரு தனிநபர் புகழுக்கு அப்பாற்பட்டவன் என்பதை விஜய் நிரூபித்துள்ளார்.
#DMK :
உங்களுடன் ஸ்டாலின்
கலைஞர் திட்டம்
உதயநிதி திட்டம்
இன்ப நிதி திட்டம் #TVK :வேலுநாச்சியார் திட்டம்
அஞ்சலை அம்மாள் திட்டம்
காமராஜர் திட்டம்
அன்னப்பூரணி திட்டம் #TVKVIjay #TVKManifesto pic.twitter.com/aCqpnLa8Oy— Sathish ✨💫 (@S_A_T_H_I_S_H_S) March 7, 2026
“>
மக்களின் அடையாளத்தையும், மண்ணின் மாண்பையும் காக்கும் தலைவர்களின் பெயர்களை முன்னிலைப்படுத்துவதே உண்மையான மக்கள் சேவை என்றும், இந்தத் தன்னலமற்ற அணுகுமுறைதான் விஜய்யை மற்ற அரசியல்வாதிகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது என்றும் இணையத்தில் தவெக தொண்டர்கள் பெருமிதத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.
