அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் ஹாலோவின் பார்ட்டி நடந்துள்ளது. இந்த பார்ட்டியில் சுமார் 100 பேர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் அங்கு திடீரென ஒருவர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதில் 18 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை காவல்துறையினர் தரப்பிலிருந்து வெளியிடாத நிலையில் எமிட் வில்சன் என்பவர் தனது 14 வயது மகன் எலிஜா இறந்த இருவரில் ஒருவர் என்று குறிப்பிட்டதோடு தனது மகனின் இறப்பிற்கு காரணமானவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.