தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் சற்று நேரத்திற்கு முன்பு அறிவித்தார். அதன்படி 70 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் 164 தொகுதிகளில் திமுக நேரடியாக களம் காண்கிறது. அதன்படி முதல்வர் ஸ்டாலின் இந்த முறையும் கொளத்தூர் தொகுதியில் களமிறங்கும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் களமிறங்குகிறார்.

அதே நேரத்தில் திமுகவில் இந்த முறை 60-க்கும் மேற்பட்ட புதிய முகங்களை முதல்வர் ஸ்டாலின் வேட்பாளராக களம் இறக்கியுள்ளார். குறிப்பாக திமுக கூட்டணியில் போட்டியிடுபவர்களில் 18 பேர் பெண்களாவார். அதன் பிறகு முனைவர் பட்டம் பெற்ற 7 பேர், சட்டம் படித்த 29 பேர், 15 மருத்துவர்கள் மற்றும் 125 பட்டதாரிகள் இந்த முறை தேர்தலில் களம் காண்கிறார்கள்.

படித்தவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுக்கப்பட்டதும் புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த முறை 4 அமைச்சர்களுக்கு தேர்தலில் சீட்டு மறுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.