தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் குறிப்பாகப் பல மூத்த தலைவர்களின் வாரிசுகளுக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் காந்திக்கு பதில் அவரது மகன் வினோத் காந்திக்கு ராணிப்பேட்டையிலும், அண்ணாநகர் எம்.எல்.ஏ மோகனுக்கு பதில் அவரது மகன் கார்த்திக்கு வில்லியவாக்கத்திலும் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, மறைந்த ஜெ.அன்பழகனின் மகன் ராஜா அன்பழகனுக்கு தி.நகரிலும், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பதில் அவரது மகன் கௌதம சிகாமணிக்கு திருக்கோவிலூரிலும் களம் காண வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சீனியர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, அவர்களது வாரிசுகளைப்  களத்தில் இறக்கி விட்டுள்ள திமுகவின் இந்த மூவ் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.