தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமை வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த முறை 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் புதுமுகங்களுக்குப் போட்டியிட ஜாக்பாட் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது
அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் குறிப்பாக, அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்திக்கு ராணிப்பேட்டையிலும், எம்.எல்.ஏ மோகனின் மகன் கார்த்திக்கு வில்லியவாக்கத்திலும் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மறைந்த ஜெ.அன்பழகனின் மகன் ராஜா அன்பழகனுக்கு தி.நகரிலும், பொன்முடியின் மகன் கௌதம சிகாமணிக்கு திருக்கோவிலூரிலும் களம் காண வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சீனியர்களுக்குப் பதிலாக அவர்களது வாரிசுகளைப் களத்தில் இறக்கி விட்டுள்ள திமுகவின் இந்த மூவ், தேர்தல் களத்தில் புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
