தமிழக சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் திமுக அமைச்சர்களின் உத்தியோகபூர்வப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியிலும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
இவர்களுடன் துரைமுருகன் (காட்பாடி), கே.என்.நேரு (திருச்சி மேற்கு), எ.வ.வேலு (திருவண்ணாமலை), தங்கம் தென்னரசு (திருச்சுழி), மா.சுப்பிரமணியன் (சைதாப்பேட்டை), சேகர்பாபு (துறைமுகம்), அன்பில் மகேஸ் (திருவெறும்பூர்), டி.ஆர்.பி.ராஜா (மன்னார்குடி), பழனிவேல் தியாகராஜன் (மதுரை மத்திய) உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் தங்களது பழைய தொகுதிகளிலேயே மீண்டும் களம் காண்கின்றனர்.
மேலும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் (அருப்புக்கோட்டை), ரகுபதி (திருமயம்), எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (குறிஞ்சிப்பாடி), நாசர் (ஆவடி) மற்றும் தா.மோ.அன்பரசன் (ஆலந்தூர்) ஆகியோரும் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
