“அந்த அசுர அலை என்னை அடியோடு கடலுக்குள்ள இழுத்துட்டுப் போனப்போ, என் உயிரே போயிருச்சுன்னு தான்  நினைச்சேன்!” என்று மெக்சிகோவின் புகழ்பெற்ற காபோ சான் லூகாஸ் கடற்கரையில் அசுர வேகத்தில் வந்த அலைகளால் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டு, மயிரிழையில் உயிர் தப்பிய வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவர் நெஞ்சைப் பதறவைக்கும் தனது நேரடி அனுபவத்தைப் பகிர்ந்துள்ளது தற்போது சர்வதேச அளவில் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி வைரலாகி வரும் அந்த அதிர்ச்சி வீடியோவில், ஆழம் குறைந்த கரைப் பகுதிக்கு வர அந்த நபர் அலைகளுடன் கடுமையாகப் போராடிய போதிலும், கடலின் ராட்சத அலைகள் அவரை மீண்டும் மீண்டும் ஆழமான பகுதிக்கு இழுத்துச் சென்ற கொடூரம் பதிவாகியுள்ளது;

எனினும் அங்கிருந்த உயிர்காப்பாளர் ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் கடலில் பாய்ந்து அசாத்திய துணிச்சலுடன் அந்தச் சுற்றுலாப் பயணியைப் பத்திரமாக மீட்டுள்ளார்.

இணையத்தில் பகிரப்பட்ட இரண்டே நாட்களில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வரும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், “காபோ கடற்கரையின் அலைகள் சற்றும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடியவை அல்ல, அங்கு நானும் ஒருமுறை எனது உயிரை இழக்கும் நிலைக்கு ஆளானேன்” என்று தங்களின் திகிலூட்டும் உண்மைச் சம்பவங்களைக் கமெண்ட்டுகளில் அள்ளி வீசி உலக நாடுகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்..

<a href=”http://

 

View this post on Instagram

 

A post shared by POSTA Baja California Sur (@postabcs)

“>