கடலூரின் உண்ணாமலைசெட்டி சாவடியில் வசிக்கும் சங்கர் (67), ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி. தற்போது நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், பள்ளியில் 1ஆம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமியிடம் சங்கர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சிறுமி, நடந்ததை தனது பெற்றோரிடம் தெரிவித்ததோடு கதறி அழுதுள்ளார்.

அவளை உடனடியாக கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் சங்கரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கடலூர் மத்திய சிறைச்சாலையில் அனுப்பப்பட்டார்.