சிறப்பு நவராத்திரி சலுகையை வோடபோன் ஐடியா நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் படுத்தியுள்ளது. ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் விதமாக வோடாபோன், ஐடியா உள்ளிட்ட பல நிறுவனங்கள் பல அதிரடி ஆஃபர்களை வழங்கி வரும் நிலையில் தற்போது அதன் தற்போதைய திட்டங்களில் கூடுதல் டேட்டாவை வழங்குகின்றது.

இந்த திட்டங்களின் விலை ரூ.1,449, ரூ.2,899 மற்றும் ரூ.3099என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்த திட்டத்தில் பயனர்கள்  50 ஜிபி வரை கூடுதல் டேட்டாவை பெறலாம். மேலும் இந்த திட்டமானது ஒரு வருடம் வேலிடியை கொண்டுள்ளது. மேலும் டிஸ்னி +ஹாஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி சந்தாவோடு கிடைக்கிறது.