இந்தியா மட்டும் இல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளில் நவராத்திரி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் துர்கா தேவி மற்றும் அவரது ஒன்பது அவதாரங்களான நவ துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நவராத்திரி செப்டம்பர் நவம்பர் மாதங்களில் வரும். இந்த ஆண்டு நவராத்திரி அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி தசரா கொண்டாட்டங்களுடன் நிறைவு பெறுகிறது.

நவராத்திரி தினங்களில் துர்கா தேவியை பல்வேறு அவதாரங்களில் கண்டு ரசிக்கலாம். இந்தியாவில் நவராத்திரி விழா கோலாலமாக கொண்டாடப்படுகிறது. ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் வரும். அதில் சைத்ர நவராத்திரி, மற்றொன்று ஷரதிய நவராத்திரி, இரண்டு குப்தா நவராத்திரிகள். அரக்கர்கள் அரசன் மகிஷாசூரன் 3 லோகங்களான பூமி, சொர்க்கம், நரகத்தை தாக்கினார்.

மகிஷாசூரன் 3 லோகங்களையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த நேரத்தில் அவனை வதம் செய்ய படைக்கும் கடவுளான பிரம்மா ஒரு பெண்ணால் மட்டுமே மகிஷாசுரனை வீழ்த்த முடியும் என வரம் அளித்தார். இதனால் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தங்களது சக்திகளை ஒன்று திரட்டி பராசக்தியை உருவாக்கியதாக இந்து புராணம் கூறுகிறது. சுமார் 15 நாட்கள் நீண்ட போருக்கு பிறகு தேவி பராசக்தி மாளையே அமாவாசை அன்று மகிஷாசூரனை திரிசூலத்தால் வதம் செய்தார்.

இதனையடுத்து 9 நாட்கள் பல்வேறு அவதாரங்களில் மக்கள் பராசக்தியை வழிபட தொடங்கியுள்ளனர். நவராத்திரியின் போது அன்னை தேவியை வழிபட்டால் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் பெருகும். 9 நாட்களும் விரதம் இருந்து தனது பக்தர்கள் வேண்டி கேட்பதை அன்னை துர்கா தேவி அள்ளி கொடுப்பார். மேலும் துர்கா தேவியை வழிபட்டால் அனைத்து வகையான தோஷங்களும் நீங்கி வாழ்க்கை நல்வழிப்படும் என்பது ஐதீகம்.