நவராத்திரியின் 9 நாட்களும் துர்கா தேவி மற்றும் அவரது ஒன்பது அவதாரங்களான நவ துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நவராத்திரி செப்டம்பர் நவம்பர் மாதங்களில் வரும். இந்த ஆண்டு நவராத்திரி அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி தசரா கொண்டாட்டங்களுடன் நிறைவு பெறுகிறது. நவராத்திரி தினங்களில் துர்கா தேவியை பல்வேறு அவதாரங்களில் கண்டு ரசிக்கலாம்.

நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கு உரியது. அன்றைய நாளில் நமக்காக உழைத்த அல்லது நாம் வருமானம் ஈட்டுவதற்கு உதவி புரிந்த ஆயுதங்களுக்கும் கல்வி அறிவை கொடுத்த புத்தகங்களுக்கும் நன்றி கூற வேண்டும். வாக் தேவி, கலைவாணி மகேஸ்வரி என பல பெயர்களால் அழைக்கப்படுபவர் தேவி சரஸ்வதி. அன்ன வாகனத்தை கொண்டிருக்கும் சரஸ்வதியை முனிவர்கள் மனமாற வழிபடுகின்றனர்.

பாற்கடலில் தோன்றி நான்முகனின் சிருஷ்டிக்கு ஆதாரமாக வழங்கியது சரஸ்வதி. சரஸ்வதி தினம் அன்று கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. நவராத்திரி 9 நாட்களும் பூஜை செய்ய முடியாதவர்கள் கடைசி மூன்று நாட்களில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நாளில் பூஜை செய்வது வழிபடுவது நன்று. இந்நிலையில் சரஸ்வதி தேவியை எவர் ஒருவர் வணங்குகிறாரோ அவரால் அனைத்து கலைகளையும் கற்க முடியும். சரஸ்வதி தேவியை போற்றும் வகையில் “சகலகலாவல்லி மாலை” என்னும் நூலை குமரகுருபரர் இயற்றியுள்ளார்கள்.

சரஸ்வதி காயத்ரி மந்திரம்:

ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே

பிரஹ்மபத்ன்யை ச தீமஹி

தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்

இந்த மந்திரத்தை தினமும் பலனாக ஒருவருக்குள் ஒளிந்திருக்கும் கலை திறன் முழுமையாக வெளிப்படும். குழந்தைகள் மந்திரத்தை கூறினால் அவர்களின் அறிவாற்றல் மேம்படும். சரஸ்வதி தேவியின் காயத்ரி மந்திரங்களை துதித்து வழிபடுபவர்களுக்கு சிறந்த வாக்கு வன்மை உண்டாகும். அற்புதமான பேச்சாற்றல், சிறந்த கல்வி ஞானம் கிடைக்க பெறுவார்கள். இந்த மந்திரத்தை கூறினால் வேலை வாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளில் சிறப்பான வெற்றிகளைப் பெறக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.