கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆழியார் பகுதியில் நான்கு சக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு லோடு ஆட்டோவில் மலை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வேலைக்காக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஆழியார் பகுதியில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 18 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.