பணி இடத்தில் மரியாதை குறைவாக நடத்தப்படுவதை சகித்துக்கொள்ள முடியாது என மும்பையைச் சேர்ந்த துருபதி என்ற இளம்பெண் தனது வேலையை ராஜினாமா செய்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மும்பையில் உள்ள இசை சார்ந்த கல்வி நிறுவனத்தில் (Ed-tech) கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த 26 வயதான இவர், கூடுதல் நேரம் பார்த்த வேலைக்காக (Overtime) ஊதியம் கேட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by VYLA | Dhrupadi (@vyla.world)

அதற்கு அவரது மேலாளர் நூற்றுக்கணக்கான நபர்களுக்கு முன்னிலையில் அவரை பொதுவெளியில் சத்தம்போட்டு அவமானப்படுத்தியதோடு, “விருப்பம் இல்லையென்றால் நாளைக்கே கிளம்பலாம்” என்று கூறியுள்ளார்.

இதனால் அதிருப்தியடைந்த அந்தப் பெண், உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, “எனக்கு மாற்று ஆளைத் தேடிக்கொள்ளுங்கள், ஆல் தி பெஸ்ட்” என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

தன்மானத்தை இழந்து வேலையில் நீடிக்கத் தேவையில்லை என அவர் எடுத்த இந்தத் துணிச்சலான முடிவுக்கு இணையதளவாசிகள் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.