புற்றுநோய் நிபுணரான டாக்டர் வர்திகா விஸ்வானி, தனது அன்றாட உணவில் தான் தவறாமல் எடுத்துக்கொள்ளும் 7 ஆரோக்கியமான சிற்றுண்டிகளைப் பற்றிப் பகிர்ந்துள்ளார். பதப்படுத்தப்பட்ட மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளுக்குப் பதிலாக, குறைந்த அளவில் பதப்படுத்தப்பட்ட மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிற்றுண்டிகளைத் தேர்ந்தெடுப்பது உடலுக்கு நீடித்த ஆற்றலைத் தரும். மேலும், இவை இரத்தச் சர்க்கரை அளவைச் சீராக வைக்கவும், உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் பெரிதும் உதவுகின்றன.

மருத்துவர் பரிந்துரைக்கும் 7 ஆரோக்கியமான உணவுகளில் முதலாவதாக தாவரப் புரதம் நிறைந்த வறுத்த எடமாமே பீன்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த வீட்டில் தயாரித்த மசாலா வேர்க்கடலை ஆகியவை அடங்கும். இரண்டாவதாக, ஒமேகா-3 மற்றும் நார்ச்சத்து நிறைந்த பூசணி, சூரியகாந்தி, ஆளி விதைகள் அடங்கிய விதை கலவை, குறைந்த கலோரி கொண்ட வறுத்த மக்கானா  மற்றும் வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை சேர்த்த வறுத்த கொண்டைக்கடலை ஆகியவை சிறந்த தேர்வுகளாகும்.

மூன்றாவதாக, குடல் ஆரோக்கியத்தையும் இதய நலனையும் மேம்படுத்தும் இரவு முழுவதும் ஊறவைத்த ஓட்ஸ் உடன் இனிப்பில்லாத சாக்லேட் தூள் மற்றும் பேரீச்சம்பழம் சேர்ந்த கலவையை அவர் பரிந்துரைக்கிறார். இறுதியாக, எண்ணெயோ அல்லது வெண்ணெயோ அதிகம் சேர்க்காமல் காற்றால் பொரிக்கப்பட்ட பாப்கார்ன், குறைந்த கலோரியில் அதிக நார்ச்சத்தை வழங்கும் ஒரு சிறந்த முழுதானிய சிற்றுண்டியாகும்.

 

View this post on Instagram

 

A post shared by Dr Vartika Vishwani (@doctorvarti)

“>

இவற்றில் பெரும்பாலான உணவுகள் வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கக் கூடியவை. பசி எடுக்கும் நேரங்களில் ஜங்க் ஃபுட்களைத் தவிர்த்து, இதுபோன்ற புரதமும் நார்ச்சத்தும் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது, அளவுக்கு அதிகமாக உண்பதைத் தடுப்பதோடு உடலுக்குத் தேவையான முழுமையான ஊட்டச்சத்தையும் வழங்கும்.