ரிபப்ளிக் டிவி விவாத மேடையில் அதன் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் பாஜக செய்தித் தொடர்பாளர் சஞ்சு வர்மா ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரதமர் மோடியின் அண்மைக்கால உரைகள் குறித்து காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தபோது, சஞ்சு வர்மா தொடர்ந்து குறுக்கிட்டுப் பேசியது அர்னாப்பை கடும் எரிச்சலடையச் செய்தது.
BJP spokesperson made a personal remark on Arnab Goswami, and it clearly triggered him.
He badly exposed her on air.
Meanwhile, during the argument, Sanju Verma sending him WhatsApp messages.
Arnab finally shouted, “Stop WhatsApping me!”
🤣🤣🤣😭pic.twitter.com/HcruvPIs6b
— Manu🇮🇳🇮🇳 (@mshahi0024) May 12, 2026
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அர்னாப், “நேரலை விவாதம் நடந்து கொண்டிருக்கும்போது எனக்கு வாட்ஸ்அப் (WhatsApp) செய்வதை நிறுத்துங்கள்” என்று சஞ்சு வர்மாவை நேரலையிலேயே விளாசித் தள்ளினார்.
ஒரு முக்கியமான பொருளாதாரப் பிரச்சனையை விவாதிக்கும் போது, ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைக்காமல் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு நேரத்தை வீணடிப்பதாக சஞ்சு வர்மாவை அர்னாப் கடுமையாகச் சாடினார்.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளதோடு, பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
