உலகில் இறைச்சி உண்பதற்கே மக்கள் நடுங்கும் ஒரு விசித்திரமான நகரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள பாலிதானா நகரமே உலகின் முதல் முழுமையான சைவ நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமண மதத்தினரின் புனிதத் தலமாக விளங்கும் இந்த இடத்தில், இறைச்சி விற்பனை செய்வதும் அல்லது உட்கொள்வதும் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தடையை மீறுபவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதால், அந்த நகரில் ‘மட்டன்’ அல்லது மாமிசம் என்ற வார்த்தையை உச்சரிக்கவே மக்கள் அஞ்சுகின்றனர். இந்தத் தடைக்குப் பின்னால் ஒரு உணர்ச்சிகரமான காரணம் உள்ளது. சுமார் 200-க்கும் மேற்பட்ட சமணத் துறவிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு, விலங்குகளின் உயிரிழப்பைத் தடுக்க இந்த நகரத்தில் இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் அவர்களின் போராட்டத்தின் விளைவாக, 2014-ஆம் ஆண்டு குஜராத் அரசு பாலிதானாவை ‘சைவ மண்டலமாக’ அறிவித்தது. ஒரு காலத்தில் மாமிசப் பிரியர்கள் அதிகம் இருந்த இந்த நகரில், இன்று முட்டை விற்பனை கூட தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு முழு நகரமே ஜீவகாருண்யத்திற்காகத் தனது உணவுப் பழக்கத்தையே மாற்றிக்கொண்டது உலக அளவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
