தமிழகத்தில் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, எக்ஸ் (X) தளப் பதிவுகளை முடக்க தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த நோட்டீஸில் உரிய காரணங்கள் ஏதும் குறிப்பிடாமல் பொதுவாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சைபர் கிரைம் காவல்துறையின் அந்த நோட்டீஸிற்கு சென்னை உயர்நீதிமன்றம் தற்போது இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மேலும், எக்ஸ் தளப் பதிவுகள் மீதான முடக்கத்தை நீக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை உரிய பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.
