2023-ல் கெத்தாக உலகக்கோப்பையைத் தூக்கிய ஆஸ்திரேலியா, இப்போது குட்டி அணிகளிடம் சிக்கித் தவிக்கிறது. 2026 டி20 உலகக்கோப்பையில் குரூப் பி-யில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா, முதலில் ஜிம்பாப்வேவிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று அதிர்ச்சியளித்தது. நேற்று நடந்த வாழ்வா-சாவா போட்டியில், இலங்கை அணியின் பதும் நிசாங்கா அடித்த சதத்தால், 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் 3 போட்டிகளில் ஆடி வெறும் 2 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா வெளியேறும் விளிம்பில் நிற்கிறது.

​இப்போதைய நிலவரப்படி, இலங்கை அணி 3 வெற்றிகளுடன் நேரடியாக ‘சூப்பர் 8’ சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டது. ஜிம்பாப்வே 2 வெற்றிகளுடன் (4 புள்ளிகள்) இரண்டாவது இடத்தில் பலமாக உள்ளது. ஆஸ்திரேலியா தனது கடைசிப் போட்டியில் ஓமனை வீழ்த்தினாலும், ஜிம்பாப்வே தனது அடுத்தடுத்த போட்டிகளில் தோற்றால் மட்டுமே ஆஸ்திரேலியாவால் முன்னேற முடியும். “நாங்க இப்போ கடவுள் கையில தான் இருக்கோம்” என கேப்டன் மிட்செல் மார்ஷே புலம்பும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. 2023-ல் உலகையே மிரட்டிய கங்காரு படை, இப்போது ஜிம்பாப்வேவிடம் மண்டியிட்டது தான் கிரிக்கெட் உலகையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.