“எங்களுக்கு எல்லாரும் ஒண்ணுதான்!” – இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றாலே மைதானமே போர்க்களம் போல காட்சியளிக்கும். ரசிகர்கள் நகத்தைக் கடித்துக் கொண்டு ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்க, இந்திய ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் இப்போது ஒரு அதிரடியான கருத்தைச் சொல்லியிருக்கிறார். “நாங்கள் பாகிஸ்தானை மற்றுமொரு சாதாரண அணியாகவே பார்க்கிறோம்; களத்தில் இருக்கும்போது எதிரணி யார் என்று பார்ப்பதில்லை” என்று அவர் கூறியிருப்பது பாகிஸ்தான் ரசிகர்களைக் கொஞ்சம் அப்செட் ஆக்கியிருந்தாலும், இந்திய ரசிகர்களை “அப்டிப் போடு!” எனச் சொல்ல வைத்திருக்கிறது.

​நன்றாகப் பந்துவீசினோம், விளையாடினோம், வெற்றி பெற்றோம் அவ்வளவுதான் – இதில் ‘பரம எதிரி’ என்றெல்லாம் ஒன்றுமில்லை என அக்சர் மிகச் சாதாரணமாகக் கடந்து சென்றிருக்கிறார். பொதுவாக இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு கொடுக்கப்படும் அதீத பில்டப்-களை உடைக்கும் விதமாக அமைந்த இந்த பேட்டி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.