சென்னை புளியந்தோப்பு அரசுப் பள்ளி விழாவில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) சட்டமன்ற உறுப்பினர் பல்லவி புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த கடுமையான குற்றச்சாட்டுக்கு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அதிகாரப்பூர்வமாகத் தனது அதிரடி விளக்கத்தை அளித்துள்ளார். இவ்விழாவில் தான் யாரையும் திட்டமிட்டுப் புறக்கணிக்கவில்லை என்று மறுத்துள்ள மேயர் பிரியா, “அரசு புரோட்டோகால் விதிமுறைகளின்படியே மேயரான நான் முதலில் குத்துவிளக்கு ஏற்றினேன், அதற்கு அடுத்ததாக மாநகராட்சி ஆணையர் ஏற்ற வேண்டும்; நாங்கள் முழுமையாக அரசு நெறிமுறைப்படியே நடந்து கொண்டோம்” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

​மேலும், இந்த விழாவிற்குச் சட்டமன்ற உறுப்பினர் பல்லவிக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது என்றும், அவருக்குரிய முழு அரசு மரியாதையையும் தாங்கள் வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளுங்கட்சியான டிவி கே-வினர் திட்டமிட்டே இந்த விவகாரத்தைப் பெரிதாக்கி, “தேவையில்லாமல் பிரச்சினை செய்ய வேண்டும் என்றே நினைக்கின்றனர்” என மேயர் பிரியா மிக ஓப்பனாகத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். சென்னையில் அரசுப் பள்ளி திறப்பு விழாவில் ஆளுங்கட்சி TVK மற்றும் எதிர்க்கட்சியான திமுக மேயர் இடையே வெடித்துள்ள இந்த நேரடி அதிகார மோதல், தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதைய மிக முக்கிய ஹாட் டாபிக்காக மாறிப் பரவி வருகிறது.