தமிழகத்தில் நிரப்பப்படாமல் உள்ள 152 உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு (Super Speciality) இடங்களை எக்காரணம் கொண்டும் அகில இந்திய தொகுப்புக்குச் சரண்டர் செய்யக்கூடாது என்று வலியுறுத்தி, முதல்வர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மிக முக்கியமான அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், இந்த 152 மருத்துவ இடங்களையும் அகில இந்திய தொகுப்புக்குத் தாராளமாக வழங்கினால், அது தமிழக அரசு மருத்துவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

​எனவே, இந்த இடங்களை மத்திய தொகுப்பிற்கு விட்டுக் கொடுக்காமல், தமிழகத்தைச் சேர்ந்த அரசு மருத்துவர்களே இந்த உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான சாதகமான சூழலை ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழக அரசு உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ள முதல்வர் விஜய் தலைமையிலான டிவிகே அரசுக்கும், எதிர்க்கட்சியான திமுக-விற்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் நிலவி வரும் வேளையில், மருத்துவ இடங்கள் தொடர்பாக உதயநிதி அனுப்பியுள்ள இந்த அதிரடி கடிதம் அரசியல் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறிப் பரவி வருகிறது.