நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக சார்பாக 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் பழைய வேட்பாளர்கள் தவிர்த்து புதுமுகங்கள் 11 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் மூன்று பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் எதிர்பார்க்கப்பட்டது போலவே வாரிசுகள் அடிப்படையிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது நேருவின் மகன் அருண் நேரு, துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், கனிமொழி, கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன் மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.