இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக நடனமாடும் வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு இணையத்தில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. திருமணங்கள் மற்றும் விழாக்கள் என பல இடங்களில் பலர் நடனமாடும் வீடியோக்கள் அதிகளவு பகிரப்படுகிறது. அதன்படி தற்போது முதியவர் ஒருவர் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. வேட்டியை மடித்து கட்டி அவர் நடனமாடும் வீடியோ தற்போது வெளியாகி பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது.