உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட சிம்கார்டு இருந்தால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். சிம் கார்டு விஷயத்தில் உங்களுக்கே தெரியாத ஏராளமான விஷயங்கள் இருக்கிறது. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிம் வைத்திருப்பது பொதுவானது. ஆனால் அதைவிட அதிக சிம் கார்டு இருந்தால் சிக்கலை ஏற்படுத்துவிடும் .சில சமயம் உங்களுக்கே தெரியாமல் வேறு ஒருவர் உங்களுடைய பெயரில் சிம் கார்டு வாங்க வாய்ப்பிருக்கிறது. அதை வைத்து மோசடி செய்யும் சம்பவங்களும் அதிகம். சிம் கார்டு தொடர்பான தகவல்களையும் ஒன்றுக்கு மேற்பட்ட சிம்கார்டு வைத்திருப்பது  எப்படி சிக்கலை ஏற்படுத்தும்? என்று குறித்தும் பார்க்கலாம்.

பல இடங்களில் ஒரு ஆதார் கார்டில் ஆறு சிம் கார்டுகள் மட்டுமே இருக்க முடியும். சிம்கார்டுக்கான முக்கிய ஆவணமாக ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது. இந்த சூழலில் ஆதாரை பயன்படுத்தி உங்கள் பெயரில் தயாரிக்கப்பட்ட சிம்கார்டை வேறு யாராவது பெறலாம். உங்களுக்கு தெரியாமல் அந்த சிம் கார்டை அவர்கள் தவறாக பயன்படுத்தலாம். எனவே நம்முடைய பெயரில் எத்தனை சிம் கார்டு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் .

அதற்கு ஆதார் கார்டில் எத்தனை சிம் கார்டுகள் செல்லுபடியாகும் என்பதை அறிய தொலைதொடர்பு துறையின் உதவியை பெறலாம். அதற்கு tafcop.sancharsaathi.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும் ஆதரவுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணில் பதிவிட்டு செல்போனுக்கு வரும் ஓடிபி நம்பரை பதிவிட வேண்டும். இப்பொழுது நம்முடைய பெயரில் இயங்கும் அனைத்து சிம் கார்டுகளையும் பட்டியலும் தெரிந்துவிடும். இதில் நாம் எத்தனை  சிம் கார்டுகள்   வாங்கியிருக்கிறோம் என்பதை பார்த்து விடலாம்.