ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் செய்யப்பட்ட அதிரடி மாற்றங்கள் மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்துள்ளன.
சஞ்சு சாம்சனை ஓபனராகக் களமிறக்கியது மற்றும் திலக் வர்மாவை பினிஷர் ரோலில் (275 ஸ்ட்ரைக் ரேட்) ஆட வைத்தது என அனைத்து வியூகங்களும் கைகொடுத்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும் இதே காம்பினேஷன் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்துப் பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், “ஜிம்பாப்வேக்கு எதிராகத் தெளிவான திட்டத்துடன் விளையாடினோம்; அனைத்து வீரர்களும் சிறப்பாகச் செயல்பட்டனர். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிக்குச் சூழ்நிலையைப் பொறுத்து புதிய திட்டங்களை வகுப்போம்; இப்போதே பேட்டிங் வரிசை குறித்து எதையும் உறுதியாகக் கூற முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நெட் ரன்ரேட் (-0.100) குறைவாக இருப்பதால், மார்ச் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் இந்தியா கட்டாயம் வென்றாக வேண்டும். ஒருவேளை மழையாலோ அல்லது வேறு காரணங்களாலோ போட்டி ரத்தானால், அதிக ரன்ரேட் வைத்துள்ள வெஸ்ட் இண்டீஸ் (+2.890) அணி எளிதாக அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.
இதனால், கொல்கத்தாவில் நடைபெறவுள்ள இந்த ஆட்டம் இந்தியாவிற்கு உண்மையான ஒரு அக்னிப் பரீட்சையாக அமையப்போகிறது.
