தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹1,600 சரிந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் இன்று மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

இந்த வாரத் தொடக்கத்தில் ஏறுமுகமாக இருந்த வெள்ளி விலை, கடந்த இரண்டு நாட்களாகக் கணிசமாகக் குறைந்து வருகிறது. அதன்படி, நேற்று ஒரு கிராம் ₹300-க்கு விற்கப்பட்ட வெள்ளி, இன்று ₹20 குறைந்து ₹280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் ₹20,000 வரை குறைந்து ₹2,80,000-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் குறைந்து வரும் தேவை காரணமாக வெள்ளி விலை இவ்வளவு பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டின் விலையும் ஒரே நேரத்தில் சரிந்துள்ளதால், இல்லத்தரசிகள் மற்றும் முதலீட்டாளர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.