கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை, தற்போது சென்னை வாசிகளுக்கு பெரும் ஆறுதல் தரும் வகையில் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று (பிப்.05) யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு சவரனுக்கு 4,640 ரூபாய் குறைந்த நிலையில், இன்றும் அதே அதிரடி தொடர்கிறது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு மேலும் 1,600 ரூபாய் குறைந்து 1,12,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 2,001 ரூபாய் சரிந்து 14,120 ரூபாய்க்கு விற்பனையாவதால், நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் இப்போதே அலைமோதத் தொடங்கியுள்ளது.

​தொடர்ந்து இரண்டு நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கம் சுமார் 6,000 ரூபாய்க்கு மேல் குறைந்திருப்பது நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண விசேஷங்களுக்காக நகை வாங்கக் காத்திருந்தவர்கள், இந்த திடீர் விலை வீழ்ச்சியை ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதி முண்டியடித்து வருகின்றனர். உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் சந்தை நிலவரங்களால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், வரும் நாட்களில் விலை இன்னும் குறையுமா அல்லது மீண்டும் எகிறுமா என்ற எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் நிலவுகிறது. எப்படியோ, இன்னைக்கு தங்கம் வாங்கப்போறவங்க செம லக்கி தான்