“அவ என்கிட்ட பேசுறதை விட்டுட்டு வேற ஒருத்தன்கூட ஜாலியா பேச ஆரம்பிச்சுட்டா சார், அதான் ஆத்திரத்துல துப்பட்டாவை வச்சே அவ கழுத்தை நெரிச்சுக் கொன்னுட்டேன் !”
என்று காதலன் ராகுல் குமார் போலிஸ் லாக்-அப்பில் கொடுத்த வாக்குமூலம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ள நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில், காதலி வேறொருவருடன் பேசத் தொடங்கியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், வெறும் 14 வயதே ஆன ஒரு பள்ளிச் சிறுமியைக் காதலனே கடத்திக் கழுத்தைக் நெரித்துக் கொடூரக் கொலை செய்துள்ள நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உ.பி-யின் கிராமப் பகுதி ஒன்றில் வசிக்கும் கூலித் தொழிலாளி ஜாலி சரோஜின் மகளான கௌசல்யா, தனது தோழிகளுடன் வயலுக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ராகுல் குமார் என்பவரால் கடத்தப்பட்டார்;
சிறுமி வீடு திரும்பாததால் பதறிய குடும்பத்தினர் போலீசாருக்குத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, தனிப்படையினர் நடத்திய அசுரத் தேடுதல் வேட்டையில், கிராமத்தில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு வயலில் இருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ராகுல் குமார், தான் ஆசைப்பட்ட சிறுமி வேறொருவனுடன் பழகிய கசப்பு காரணமாகவே அவளது துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் கொடூரக் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், குற்றவாளி மீது போக்சோ மற்றும் கொலை உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்பி அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
