தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், இன்று (பிப்ரவரி 6) அதிரடியாகக் குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1,600 குறைந்து, ஒரு சவரன் ₹1,12,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஒரு கிராம் தங்கம் ₹200 குறைந்து ₹14,120-க்கு விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு மொத்தம் ₹6,240 குறைந்துள்ளதால், நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் தங்கம் மீதான முதலீடுகள் குறைந்ததே இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
வரும் நாட்களிலும் இந்த விலை குறைவு நீடிக்க வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
