ரயிலில் முறையான டிக்கெட் இன்றி ஏசி பெட்டியில் பயணம் செய்த பெண் ஆசிரியரை, பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகர் கீழே இறங்கச் சொன்ன வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு நேரம், பலத்த மழை பெய்து கொண்டிருந்த சூழலில் தன்னை இறங்கச் சொல்வது அநீதி என்றும், தன்னைத் துன்புறுத்துவதாகவும் அந்தப் பெண் அதிகாரி மீது குற்றம் சாட்டினார்.
ஆனால், அந்தப் பெண் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை என்பதைத் தெரிந்துகொண்ட அதிகாரி, பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு இப்படிச் செய்வது தவறு என்று கூறி, டிக்கெட் இல்லாமல் ஏசி பெட்டியில் பயணம் செய்ய அனுமதிக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்தார்.
இந்த வீடியோ முதலில் பரவியபோது அந்த அதிகாரியை மக்கள் விமர்சித்தனர். ஆனால், உண்மை நிலையை அறிந்த பிறகு, கடமையைச் சரியாகச் செய்த அந்த அதிகாரியைப் பாராட்டி சமூக வலைதளங்களில் கருத்துகள் குவிகின்றன. எந்த ஒரு நபராக இருந்தாலும், அது பெண்ணாகவோ அல்லது அரசு ஊழியராகவோ இருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டே நடக்க வேண்டும் என்று மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Train TICKET CHECKER seen forcing young girl off Train at midnight during heavy rain over missing ticket. pic.twitter.com/G9SkJZdE6p
— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 14, 2026
“>
டிக்கெட் இன்றி பயணம் செய்வது தவறு என்பதை உணர்த்தி, தனது பொறுப்பைச் சரியாகச் செய்த அதிகாரியின் செயலுக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
