அமேசான் மழைக்காடுகளின் நதியில் மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய ராட்சத பச்சை அனகோண்டா பாம்பு ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பாம்பு பார்ப்பதற்கே மிகவும் பயங்கரமாகவும், மீனவரின் தலையை விடப் பெரிய தலை கொண்டதாகவும் காட்சியளிக்கிறது. இந்த ராட்சத அனகோண்டாவைத் தூக்குவதற்கு அந்த மீனவர் மிகுந்த சிரமப்படுகிறார்.
அதிர்ஷ்டவசமாக, அந்தப் பாம்பு வலையில் சிக்கும்போதே இறந்த நிலையில் இருந்ததால், மீனவர் தப்பினார். ஒருவேளை அது உயிரோடு இருந்திருந்தால், அது பெரிய ஆபத்தாக முடிந்திருக்கும் என்று அந்த வீடியோவில் கூறப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக எடையுள்ள பாம்பாகக் கருதப்படும் இந்த பச்சை அனகோண்டா, சுமார் 30 அடி நீளம் மற்றும் 250 கிலோ எடை வரை வளரக்கூடியது. இவை தண்ணீரில் மிக வேகமாக நீந்தும் திறன் கொண்டவை.
பொதுவாக இவை மனிதர்களை வேட்டையாடுவதில்லை என்றாலும், இவற்றின் பிரம்மாண்டமான உடலமைப்பைக் கருத்தில் கொள்ளும்போது, இவைகளால் ஒரு மனிதனை விழுங்க முடியும் என்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது.
View this post on Instagram
“>
தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ, அமேசான் காடுகளின் ஆபத்தான வனவிலங்கு உலகத்தை மீண்டும் ஒருமுறை மக்களுக்கு உணர்த்தியுள்ளது.
