தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ல் 100-க்கும் மேற்பட்ட இடங்களை வாரிக்குவித்து வரலாற்றுச் சாதனை படைத்த பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் “தளபதி” விஜய் உணர்ச்சிப் பூர்வமான முதல் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “நம்மைக் குறைத்து மதிப்பிட்டவர்களுக்கு மத்தியில், தூய்மையான மக்கள் சக்தியை மட்டுமே நம்பிக் களமிறங்கி இன்று இமாலய வெற்றி பெற்றுள்ளோம்; இது தவெக-வின் தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழக மக்களின் உணர்வுப்பூர்வமான ஜனநாயகம் பெற்ற மாபெரும் வெற்றி!” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திராவிடக் கோட்டைகளை அதிரவைத்துத் தன்னை அரியணைக்கு அருகில் கொண்டு வந்து நிறுத்திய தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கும், இரவும் பகலும் களத்தில் உழைத்த தவெக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் தனது வாழ்நாள் நன்றியைச் சமர்ப்பிப்பதாக விஜய் உருகியுள்ளார். விமர்சகர்களின் வாயடைக்கச் செய்த இந்த ‘கெத்தான’ அறிக்கை, தவெக தொண்டர்களை ஆனந்தக் கண்ணீரில் நனைய வைத்துள்ளது.
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம்.
நடுநிலை…
— TVK Vijay (@TVKVijayHQ) May 5, 2026
“>
