தமிழகத்தில் புதிய ஆட்சி அமைப்பதற்கான அரசியல் சதுரங்க வேட்டை உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், டெல்லி காங்கிரஸ் தர்பாரில் நேரடியாகக் காய்களை நகர்த்தியுள்ளார் தவெக தலைவர் விஜய்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கோரி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிற்கு விஜய் அதிகாரப்பூர்வமாகக் கடிதம் எழுதியுள்ள அதிரடித் தகவலை, காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் செய்தியாளர்களிடம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இந்த மெகா அரசியல் நகர்வைத் தொடர்ந்து, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நாளை (மே 06) காலை 9:30 மணிக்குக் காங்கிரஸ் கட்சியின் மிக முக்கியமான “அரசியல் விவகாரங்கள் கமிட்டி கூட்டம்” அவசரமாகக் கூடுகிறது.

இந்த உயர்மட்டக் கூட்டத்தில், தவெக தலைவர் விஜய்யின் கடிதம் குறித்தும், அவருக்குத் தங்களது 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை வழங்கித் தமிழகத்தில் புதிய கூட்டணி ஆட்சி அமைப்பதில் பங்கெடுப்பது குறித்தும் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாக கிரிஷ் ஜோடங்கர் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியின் பிடியிலிருந்து நழுவிக் தவெக-வோடு கைகோர்க்கக் காங்கிரஸ் தயாராகி வரும் இந்தச் சம்பவம், கோட்டை அதிகாரப் போட்டியில் அனலைக் கூட்டியுள்ளது.

“>