தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பல தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து வருகிறது. இதைக் கொண்டாடும் விதமாக தமிழகம் மட்டுமின்றி, கடல் கடந்து இலங்கையிலும் விஜய்யின் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர்.
குறிப்பாக, யாழ்ப்பாணம் காக்கைதீவு பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிகளைப் பறக்கவிட்டு ஈழத்து ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
View this post on Instagram
மற்றொரு பக்கம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் முதல்வருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “ஒழுக்கத்தை விட அணுகுமுறை (Attitude) மிகவும் முக்கியம்” என்றும், முதல்வர் ஸ்டாலின் வசீகரமான புன்னகைக்குச் சொந்தக்காரர் என்றும் ரஜினி அந்த வீடியோவில் புகழ்ந்து பேசியுள்ளது அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
