தமிழக முதலமைச்சர் விஜய் இதுவரை ஒரு செய்தியாளர் சந்திப்பைக் கூட நடத்தாதது மற்றும் நிதி ஆயோக் கூட்டத்திற்குப் பிறகு அவர் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டது குறித்து சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த விமர்சனங்களுக்குப் பிரபல மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே தனது சமீபத்திய பேட்டியில் மிகக் கடுமையான பாணியில் பதிலடி கொடுத்துள்ளார்.
“ஜோசப் விஜய் என்று பெயர் வைத்துக்கொண்டு அவர் மூகாம்பிகை கோவிலுக்கும், திருச்செந்தூருக்கும் போவது இந்தியர்களின் உண்மையான மத நல்லிணக்கத்தைக் காட்டுகிறது என்றும், அதை கேள்வி கேட்க யாருக்கும் எந்த உரிமையும் இல்லை” என்றும் பாண்டே மிகவும் காட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சர் பிரஸ் மீட் வைக்காததை விமர்சிப்பவர்களை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை பாண்டே முன்வைத்துள்ளார். “செய்தியாளர் சந்திப்பு கொடுக்க வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை.
செய்தியாளரை விஜய் ஏன் சந்திக்கவில்லை என்ற கேள்விக்கு..!
Behindwoods Anchor ஐ வச்சு செய்த ரங்கராஜ் பான்டே..!🤣 pic.twitter.com/0zu5cHGlM8
— ♛🆁.JAY ˚˖𓍢ִ໋🦢˚ (@spjraja) June 14, 2026
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உங்களிடம் வார வாரம் பேட்டியா கொடுத்தார்? நரேந்திர மோடிதான் தினமும் பேட்டி கொடுக்கிறாரா? முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தினமும் பேட்டி கொடுத்தாரே, அவரை ஏன் மக்கள் ஆட்சியில் உட்கார வைக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். நமக்கு முதலமைச்சர் வேலை பார்க்க வேண்டும், பேட்டி கொடுக்க வேண்டியது கட்டாயமில்லை என்று கூறி விஜய் மீதான விமர்சனங்களுக்குப் பாண்டே செம்மையாக முட்டுக்கொடுத்து விளாசியுள்ளார்.
