சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ, மனிதநேயத்தின் மகத்துவத்தை உணர்த்துகிறது. வத்சல் ஸ்ரீவாஸ்தவா என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், ஒரு வாடிக்கையாளர் டெலிவரி செய்ய வந்த இளைஞருடன் ஜாலியாக ஒரு பலூன் விளையாட்டை விளையாடுகிறார்.

விளையாட்டு முடிந்ததும், அந்த இளைஞருக்கு 300 ரூபாயை அன்பளிப்பாக வழங்குகிறார். அந்தச் சிறு தொகையைப் பெற்றதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த அந்த டெலிவரி பாய், எதிர்பாராத விதமாக வாடிக்கையாளரின் காலில் விழுந்து நன்றி கூறுகிறார்.
<a href=”http://

 

View this post on Instagram

 

A post shared by Vatsal Srivastava (@vatsal_srivastavaa)

“>
இது அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.
இந்தச் செயல் குறித்து அந்த இளைஞர் பேசுகையில், 300 ரூபாய் சம்பாதிக்க தான் மூன்று முதல் நான்கு மணி நேரம் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும் என்றும், இவ்வளவு எளிதாக அந்தப் பணம் கிடைத்ததை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் உணர்ச்சிவசப்பட்டுக் கூறுகிறார்.

இந்த வீடியோவைப் பார்த்த லட்சக்கணக்கான மக்கள், டெலிவரி ஊழியர்களின் கடின உழைப்பைப் பாராட்டியும், வாடிக்கையாளரின் தாராள மனப்பான்மையைப் புகழ்ந்தும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

நம் அன்றாடத் தேவைகளுக்காக வெயில், மழை பாராமல் உழைக்கும் இத்தகைய மனிதர்களை நாம் மதிக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் ஆழமாகப் பதிவு செய்துள்ளது.