அகமதாபாத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற மகர சங்கராந்தி கொண்டாட்டத்தின் போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பட்டம் அறுக்கப்பட்ட பழைய வீடியோ ஒன்று இப்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மெம்நகர் பகுதியில் உள்ள சாந்திநிகேதன் சொசைட்டி கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து அமித் ஷா பட்டம் பறக்கவிட்டபோது, அங்கிருந்த ஒரு நபரால் அவரது பட்டம் அறுக்கப்பட்டது. குஜராத் முதல்வர் பூபேந்திர படேலும் அந்த சமயத்தில் அவருடன் இருந்தார். தற்போது 2026-ஆம் ஆண்டு மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படும் வேளையில், கௌரங் பரத்வாஜ் என்பவர் இந்த வீடியோவை மீண்டும் பகிர்ந்துள்ளார்.
<a href=”http://
#WATCH | Union Home Minister Amit Shah and Gujarat CM Bhupendra Patel celebrate Makar Sankranti in Ahmedabad pic.twitter.com/NSZiLAkn5T
— ANI (@ANI) January 14, 2025
“>
தன்னுடைய பட்டத்தால் தான் அமித் ஷாவின் பட்டம் அறுக்கப்பட்டது என்று அந்த நபர் கிண்டலாக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலவிதமான நகைச்சுவையான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். “அமித்ஷாவின் பட்டம் அறுந்துவிட்டது” என்றும், “அமைச்சர் பட்டத்தையே அறுத்த அந்த நபர் இன்னும் உயிரோடு இருக்கிறாரா?” என்றும் விளையாட்டாகக் கேட்டு வருகின்றனர். ஒரு சாதாரண மனிதர் கூட உள்துறை அமைச்சரின் பட்டத்தை அறுக்க முடியும் என்பது குஜராத் உத்தராயணப் பண்டிகையின் கலகலப்பான போட்டியைக் காட்டுவதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.
