கொழும்புவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில், பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா, இஷான் கிஷனின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 175 ரன்கள் குவித்தது.

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி, இந்திய வீரர்களின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்த அதிரடி வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக முன்னேறியுள்ளது.