டெல்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுஸ் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு தலைமை விருந்தினராக அழைக்கப்பட்ட ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷிற்கு பெரும் ஏமாற்றம் காத்திருந்தது. விழா தொடங்க வேண்டிய நேரத்தில் அரங்கிற்குச் சென்ற அவர், அங்கு ஒரு ஊழியர் கூட இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

காலி நாற்காலிகளுடன் வெறிச்சோடி காணப்பட்ட அரங்கத்தின் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த அவர், கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியத்தைக் கடுமையாகச் சாடினார்.

சுமார் 300 மாணவர்கள் வருவார்கள் என்று அழைப்பிதழில் கூறப்பட்டிருந்த நிலையில், ஒரு சில மாணவர்கள் மட்டுமே அங்கு இருந்தனர்இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சிலர் ஸ்மிதாவிற்கு ஆதரவாகப் பேசினாலும், பலர் “புத்திசாலி மாணவர்கள் இது போன்ற நிகழ்ச்சிகளைத் தவிர்த்துவிட்டார்கள்” என கிண்டலாகப் பதிவிட்டு வருகின்றனர்.

“>

 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் இந்தத் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இது குறித்து கல்லூரி நிர்வாகம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்தச் சம்பவம் டெல்லி கல்வி வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது