சத்தீஸ்கர் மாநிலம், சூரஜ்பூர் மாவட்டம், நாராயண்பூர் கிராமத்தில் உள்ள ஹன்ஸ் வாஹினி வித்யா மந்திர் பள்ளியில், 4 வயது மாணவனை வீட்டுப்பாடம் முடிக்காததற்காக ஆசிரியைகள் மரத்தில் கட்டித் தொங்கவிட்ட கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டுப்பாடம் முடிக்காததைக் கண்ட ஆசிரியை காஜல் சாகு, சிறுவனை வெளியே அழைத்துச் சென்று, அவனது சட்டையைக் கயிற்றால் கட்டி, பள்ளி வளாகத்தில் இருந்த ஒரு மரத்தில் மணிநேரக் கணக்கில் கட்டித் தொங்கவிட்டார். சிறுவன் அழுது கெஞ்சியபோதும், அருகில் நின்ற மற்றொரு ஆசிரியை அனுராதா தேவாங்கன் கவலைப்படவில்லை. இந்தச் செயலை யாரோ ஒருவர் வீடியோ எடுத்துப் பதிவிட்டதால், மக்கள் மத்தியில் கோபம் அதிகரித்தது.
Chhattisgarh SHOCKER: 4-year-old hung from tree by teachers for not doing homework#viralvideo #chhattisgarh pic.twitter.com/G242pXRFaQ
— Asianet News English (@AsianetNewsEN) November 25, 2025
“>
மாவட்டக் கல்வி அதிகாரி அஜய் மிஸ்ரா விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், சிறுவனின் தந்தை சந்தோஷ் குமார் சாகு, ஆசிரியைகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
