திருடு போன நகையைப் போலீசார் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், பாதிக்கப்பட்ட நபருக்குத் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

நகை திருட்டு வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் என்ன செய்யலாம் என்பது குறித்தும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். அதன்படி, புகார்தாரருக்கு அந்தத் திருடப்பட்ட நகையின் மதிப்பில் 30% தொகையை, 12 வாரங்களுக்குள் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது, திருட்டுச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ள மகிழ்ச்சிக்குரிய உத்தரவாகப் பார்க்கப்படுகிறது.