சாதாரணமா வீட்டுக்குள்ள ஒரு சின்னப் பாம்பு வந்தாலே பயந்து நடுங்கி ஊரையே கூட்டுற நமக்கு மத்தியில, பாம்புகளைத் தங்களோட குடும்ப உறுப்பினர்கள் மாதிரி நடத்துற ஒரு விசித்திரமான கலாச்சாரம் இந்தியாவோட சில கிராமங்கள்ல இருக்கு.

மகாராஷ்டிராவில் இருக்குற ‘ஷெத்பல்’ அப்படிங்குற கிராமத்தை இந்தியாவின் முதன்மையான சர்ப்ப கிராமம்னு சொல்றாங்க. இந்த ஊர்ல இருக்குற வீடுகள், தெருக்கள், பள்ளிக்கூடங்கள்னு எல்லா இடத்துலயும் நாகப்பாம்புகள் ரொம்ப சாதாரணமா சுத்தித் திரியுது.

எந்தளவுக்குன்னா, மக்கள் புதுசா வீடு கட்டும்போது கூட பாம்புகள் வந்து தங்கி ரெஸ்ட் எடுக்குறதுக்காகவே கூரையிலயும் சுவர்கள்லயும் ‘தேவஸ்தான்’ மாதிரி தனியா இடம் ஒதுக்கி கட்டுறாங்க. இதேமாதிரி, மேற்குவங்காளத்துல இருக்குற ஒரு கிராமத்துலயும் பல நூறு வருஷங்களா ஒற்றைக்கண் நாகப்பாம்புகளோடு மனிதர்கள் ஒன்னா வாழுற விசித்திரமான வழக்கம் இன்னைக்கும் தொடருதுஇந்தக் கிராமங்கள்ல இருக்குற சின்னப் புள்ளைங்க கூட விஷப் பாம்புகளைப் பார்த்து அழுகாம, பயப்படாம அதுங்க கூட வெறித்தனமா விளையாடுறது சோசியல் மீடியால பயங்கர வைரலாகி வருது.

இந்த ஊர்கள்ல ஆயிரக்கணக்கான பாம்புகள் சுத்தினாலும், அவை அங்க இருக்குற மக்களைக் கடிக்கிறது இல்லைங்குறதுதான் இப்போ வரைக்கும் நீடிக்குற மர்மம். “நாம அவங்கள பயமுறுத்தாம மரியாதையா நடத்துனா, அவங்களும் நமக்கு எந்தக் கெடுதலும் செய்ய மாட்டாங்க”னு அங்க இருக்குற மக்கள் ரொம்ப ஆழமா நம்புறாங்க.

இந்தஆச்சரியமான மனித-பாம்பு சகஜீவனத்தைப் பாக்குறதுக்காகவே உலக நாடுகள்ல இருந்து ஏகப்பட்ட டூரிஸ்ட்கள் இந்த ஊருக்கு வர்றாங்க. ஆனா, போட்டோ எடுக்குறதுக்காகவோ இல்ல ரீல்ஸ் செய்யுறதுக்காகவோ அங்க இருக்குற பாம்புகளைத் தொட்டு தொந்தரவு செய்யக்கூடாதுன்னு கிராமப் பெரியவர்கள் கண்டிப்பான வார்னிங் கொடுத்திருக்காங்க.