நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், வயிற்றுப் பிழைப்புக்காகக் கடும் வெயிலிலும் உயிரைப் பொருட்படுத்தாது உழைக்கும் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்களைக் காத்துக் கொள்ளப் போராடும் நெஞ்சை உருக்கும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், சுட்டெரிக்கும் நடுப்பகல் வெயிலில் தார்ச் சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள், தகிக்கும் வெப்பத்திலிருந்து தப்பிக்கத் தங்கள் உடல்கள் மீது தண்ணீரை ஊற்றிக் கொள்கின்றனர்.

அதிலும் குறிப்பாக, ஒரு தொழிலாளி தனக்கு மட்டும் தாகம் தணித்துக் கொள்ளாமல், சக தொழிலாளர்களின் உடல்களின் மீதும் தண்ணீரை ஊற்றி வெப்பத்தைக் குறைக்கப் பாசத்துடன் உதவும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் பதிவாகியுள்ளன.

“>

 

இக்காணொளியைக் கண்டு உருகிய இணையவாசிகள், அடுத்தவர் வீட்டுக்காக வெயிலில் கருகும் இவர்களின் உழைப்பிற்குத் தங்களது மரியாதையைத் தெரிவித்து வருவதுடன், ஏழைகளின் உழைப்பு இரண்டு வேளை உணவோடு முடிந்துவிடுவதாகச் சோசியல் மீடியாக்களில் தங்களது ஆதங்கக் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.